உள்நாடு

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை..! பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு..! 

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் மார்ச் 30 அன்று  திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்றது.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது.
இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர் எம்.ஜே. புஹாது உட்பட பலரும் ஈட்டுப்பட்டனர்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *