விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நாளை கோலாகல ஆரம்பம். காயத்தால் விலகினார் டில்ஷான் மதுஷங்க

16ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடர் நாளை மிகக் கோலாகளமாக ஆரம்பிக்கின்றது. இதில் பங்கேற்கவிருந்த இலங்கை வீரர்கள் உபாதைக்குள்ளான நிலையில் அவர்கள் இத் தொடரின் முதல் அத்தியாயத்தில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகின்றது.

உலகின் முன்னனி கழக மட்ட இருபதுக்கு இருபது தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நாளை பிரமாண்டமான ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பித்து முதல் போட்டி நடப்புச் சம்பியனான மகேந்திரசிங் டோனி தலைமைதாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பேங்களூரு அணிக்கும் இடையில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வீரர்களில் மதீஷ பத்திரன மற்றும் மகேஷ் தீக்சன ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2ஆவது ரி20 போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன உபாதைக்குள்ளானார். இதனால் அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறியிருந்தார். மேலும் அவர் இதுவரையில் குணமடையாமையால் அவரான் நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவத்தில் அவரால் பங்கேற்ற முடியாமல் போயுள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றைய வீரரான சுழல்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சன சென்னை அணியுடன் இணைந்து கொண்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டியின் போது உபாதையடைந்தமையால் அவரால் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளரான குவெனா மாபாகவை மும்மை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் பெறப்பட்ட லசித் மாலிங்கவின் பந்துவீச்சுப் பாணியில் பந்துவீசும் நுவன் துஷார ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சன்றைசஸ் ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட வனிந்து ஹசரங்க இதுவரையில் அவ்வணியுடன் இணையவில்லை. அவர்இத் தொடரின் முதல் பாதி போட்டிகளில் பங்கெடுப்பாரா என்பது தொடர்பில் இன்னும் கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.

மற்றைய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர கொக்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து உபாihயில் சிக்கியுள்ளமையால் அவரால் இவ்வாண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க முடியுமா என்பது சந்தெகமே.

மேலும் இலங்கை கிரிக்கெட் நேற்றைய தினம் வெளியிட்ட தகவலில் உபாதைக்கு உள்ளான வீரர்கள் தமது உபாதை பூரண குணமடையும் வரை எந்தத் தொடர்களிலும் பங்கேற்க வேண்டாம் எனவும் , எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி முழு பலத்துடன் களமிறங்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *