உள்நாடு

மாவனல்லை பதுரியாவின் முக்கிய வேண்டுகோள்..!

மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் வரலாறு பற்றிய நூலொன்று அக் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் திருமதி நஸீஹா ஸரூக் அவர்களால் தொகுத்து நூலுரு பெறவுள்ளது. இதற்காக பின்வரும் தகவல்கள் இக் கல்லூரியில் கல்வி கற்ற நாடளாவிய ரீதியில் வசித்து வரும் மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பாடநெறியை பூர்த்தி செய்தோர் பல்கலைக்கழகத்தின் Demosttrater ஆக செயல்பட்டு இருப்பின் பாடம்,பல்கலைக்கழகம் என்பவற்றை குறிப்பிடவும்.

தேசிய கல்வியல் கல்லூரி அனுமதி பெற்றோர் தனது உயர் தர பரீட்சைக்கு தோன்றிய ஆண்டு, பாடநெறி, தேசிய கல்வியியல் கல்லூரியின் பெயர்,என்பவற்றை குறிப்பிடவும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக கடமையாற்றியோர்,கற்பிக்கும் பாடம்,பல்கலைக்கழகம், என்பவற்றை குறிப்பிட்டவும்.

பாடசாலையில் சிரேஷ்ட மாணவத் தலைவன் அல்லது தலைவியாக இருந்தோர் தனது பெயர்,கடமையாற்றி ஆண்டு என்பவற்றை குறிப்பிடவும்.

2005ஆம் ஆண்டுக்கு முன் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பின் சான்றிதழ் பிரதியுடன் குறிப்பிடவும்.

மேற்குறிப்பிட்டோர் தாங்கள் தகவல்களை 2024 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் 0770180020 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு தரவுகளை வழங்குமாறு கல்லூரி அதிபர் ஏ.எல் .ஏ. ரஹ்மான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

(மாவனல்லை செய்தியாளர் -பாரா தாஹீர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *