விளையாட்டு

இலங்கை எதிர் வங்கதேசம்- தீர்க்கமான 2ஆவது போட்டி இன்று

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 2ஆவது போட்டி இன்று இலங்கை நேரப்படி 2 மணிக்கு சிட்டகொங் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பங்களாதேஷ் அணி அணித்தலைவரான நஜ்முல் ஹுசைன் சான்டோவின் அசத்தல் சதமும் , அனுபவ வீரரான முஸ்பிகுர் ரஹீமின் அரைச்சதமும் கரம் கொடுக்க 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த பங்களாதேஷ் அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரின் தீர்கமான 2ஆவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக சிட்டகொங் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப் போட்டியில் இவ்விரு அணிகளும் எந்தவித மாற்றங்களையும் செய்யாது முதல் போட்டியில் பங்கேற்ற அணிகளையே களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

 

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *