உள்நாடு

சுயமாக தொழில் தொடக்கி பலருக்கு தொழில் வழங்குனராக மாறும் கல்விமுறையில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும் : கிழக்கின் கேடயம்.

நாம் முயற்சிக்காதவிடத்து எந்த மாற்றமும் நிகழாது. மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச இளைஞர்கள் சந்திப்பு கிழக்கின் கேடயம் நாவிதன்வெளி கிளைத் தலைவர் ஏ.எல்.எம். அர்சாத் தலைமையில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்னொருவருக்கு அநியாயம் செய்யாமல் தமது வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தேடிக்கொள்வது கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வாலிப வயதில் கல்வியைத்தவிர வேறு எந்த சிந்தனைக்கும் இடம்கொடுக்கக்கூடாது. அதேநேரம் சுயமாக தொழில் தொடக்கி பலருக்கு தொழில் வழங்குனராக மாறும் கல்விமுறையில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு சமூக அக்கறை கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். உங்களில் இருந்து நல்ல தலைவர்கள் உருவாகி நமது மக்களை நன்றாக வாழவைக்க கூடியவர்களாக மாறவேண்டும். இன்று நாம் நமது மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு மூல காராணம் சரியான தலைவர்களை நாம் உருவாக்க தவறியமைதான். ஆகவே அதிலும் நாம் கவனத்துடன் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *