வெகு விமரிசையாக நடைபெற்ற மகே கதாவ நூல் வெளியீட்டு நிகழ்வு..
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய மகே கதா ‘தனது சுய கதை’ என்ற அவரது வாழ்க்கைச் சரிதை நூல் செவ்வாய்க்கிழமை 05 கொழும்பு 10 ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
சிங்கள மொழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூல் மிக விரைவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
இந் நிகழ்வில் பிரதம மந்திரி தினேஷ் குணவர்த்தன, பாராளுமன்றத்தின் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ஆனாந்தா கல்லூரியின் அதிபர், சர்வ மதங்களும் சேர்ந்த மத பெரியார்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சகல கட்சித் தலைவர்கள், ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவ சங்கங்கள், பேருவளை பிரதேச வாழ் ஆதரவாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் என மண்டபத்தின் இரண்டு மாடிகளிலும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர்.
நூல் பற்றிய விமர்சன உரையை வல்பொல ராகுல பௌத்த கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ,களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி ரங்கா கலன்சூரிய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரபல ஊடகவியலாளருமான ஏரானந்த ஹெட்டி ஆராய்ச்சி ஆகியோரும், ஏற்புரையை இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் நிகழ்த்தினார்கள்.
வாழ்க்கையோட்டத்தில் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் முகமாக 19 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், தமது சிறு வயதில் பாடசாலை கல்வி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் விடுதி வாழ்க்கை, விடுதி மாணவத் தலைவர், பல்கலைக்கழக கல்வி, சட்டக் கல்லூரி கல்வி, மாணவ கால போராட்டம், ஐந்து தசாப்த கால கொள்கை ரீதியான அரசியல் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அடங்கலான இந்த சுயசரிதை நூல் தான் கல்வி கற்ற ஆனந்தா கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இங்கு உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் – அன்று சிங்கப்பூர் போன்ற நாடு நமது நாட்டின் ஓர் உதாரணமாகக் கொண்டு அந்த நாட்டில் வாழும் சகல இன மத சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னேறியுள்ளன. நாம் தற்பொழுது எங்கு உள்ளோம். நமது நாடு எந்த நிலையில் உள்ளது. இந்த ஆனாந்தா கல்லூரிதான் தனது வாழக்கையில் ஒரு முன்னேற்றத்தை உண்டு பண்ணியது. அன்று இன, மத, வித்தியாசம் தெரியவில்லை நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் போன்றே இந்தக் கல்லூரியில் கற்றார். அன்று குலரத்ன அதிபர் அவர்கள் டீ.பி. ஜாயாவை கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக பொறுப்பேற்க சொன்னார். அதன் பிறகு நாடு முழுவதும் சாஹிரா கல்லூரிகள் உருவாகின, ஆனாந்தா நாளந்தா, அதே போன்று ஹிந்துக் கல்லூரிகள் உருவாகின. அன்று நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவனாக இருந்து வசந்த கருணாகொடவை கொக்கி குழுவின் தலைவனாக பேதர்வில் அன்று இருந்த ஆசிரியர்கள் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த அளவுக்கு சிறுபான்மை பெரும்பான்மை வித்தியாசம் இருக்க வில்லை. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஏனைய சிறுபான்மைத் தலைவர்கள் 50 க்கு 50 கேட்டவுடன் டி.பி ஜாயா அவர்கள் அது எமது உள்பிரச்சினை, அதை எமது பெரும்பான்மை அண்ணாவுடன் பேசிப் பெற்றுக் கொள்வோம். முதலில் நாம் அனைவரும் சேர்ந்து இலங்கையர் என்ற ரீதியில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வோம் என டி. பி. ஜாயா பேசினார். அவர் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக வும் , டி.பி.ஜயதிலக்க இந்தியாவின் உயர் ஸ்தானிகராக வும் பதவி வகித்தார்கள். பாகிஸ்தான் டி.பி.ஜாயா வுக்கு பிரஜா உரிமை வழங்க முற்பட்டபோது டி.பி. ஜாயா அவர்கள் எனது தாய்நாடு இலங்கை அந்த பிராஜையாகவே நான் வாழ்வேன் என இலங்கை மீள வந்திருந்தார் என்பது வரலாறு.
(அஷ்ரப் ஏ சமத்)