மருதமுனையில் இரத்ததான முகாம் – பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் பங்கேற்பு..!
மருதமுனை “மனாரியன்ஸ் 99″ (Manariyan’s Ninety-nine) அமைப்பு கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவு வளாகத்தில் அமைப்பின் தலைவர் எம்.எம்.பஸீல் தலைமையில் இன்று (02.03.2024) நடைபெற்றது.
இதில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு சாதாரண தரம் கல்வி கற்ற மாணவர்களில் ஒருவரான திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டதுடன் இரத்தம் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி னுச. பி.எம்.கவிதா, பாடசாலையில் அதிபர் ஐ.உபைதுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)