உள்நாடு

மதுரங்குளி விருதோடை அல்-ஜாமியத்துல் அஸீஸிய்யா கலாபீடத்தின் புதிய மாணவர் மற்றும் விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நடும் விழா..!

பெற்றோரை இழந்த எமது பிள்ளைச் செல்வங்களுக்கு சிறந்த மார்க்க அறிவுடனான கல்வியைப் பெற்றுக் கொடுக்க உதவுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தர்மமாகும். சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக கை கொடுப்பது நிலைபேரான தர்மமாகும் என தர்ஹா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் தெரிவித்தார்.

மதுரங்குளி விருதோடை அல்-ஜாமியத்துல் அஸீஸிய்யா கலாபீடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மாணவர் மற்றும் விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கலாபீட ஸ்தாபகர் சங்கைக்குரிய பழீலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மௌலானா குஷ்ஹாலி அர்ரிபாயீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சரஈஆ கவுன்ஸில் தலைவரும் மூத்த உலமாவுமான மௌலவி அல் உஸ்தாத் அல்-ஹாஜ் ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர் (பஹ்ஜி) துஆப் பிரார்த்தனை நடத்தினார்.

பஸீஸிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி அல்-ஹாஜ் எம்.அப்துல் வாஹித் (பஹ்ஜி) உட்பட கலாபீட விரிவுரையாளர்கள்,அல் பாஸ் சர்வதேச பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் கலாநிதி நஜீப் ஹாஜியார் மூத்த உலமாவான மௌலவி ஹஸ்புல்லாஹ் அப்துல் காதரை பொன்னாடை போத்தி கௌரவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது – பெற்றோரை இழந்த பிள்ளைகளை நாம் எல்லா துறைகளிலும் கை தூக்கி சமூகத்திற்கும் ஊருக்கும் நாட்டிற்கும் உகந்த நற்பிரஜைகளாக மாற்ற வேண்டும். இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்கள். அவர்களுக்கு சீரான கல்வியைப் பெற்றுக் கொடுத்து உலமாக்களாகவும்,வைத்தியர்கள் ஆகவும்,பொறியியலாளர்களாகவும்,சட்ட த்துறை நிபுணர்களாகவும் உருவாக்க வேண்டும். பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை பராமரிப்பது சிறந்த பணியாகும்,விருதோடை அஸீஸிய்யா கலாபீடம் இப் பணியை செவ்வனே முன்னெடுத்துள்ளது. மார்க்கக் கல்வியையும்,உலகக் கல்வியையும்,தொழில் கல்வியையும் எமது பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.ஆன்மீகக் கல்வி உலகக் கல்வி மேம்பாட்டுக்கு கைகொடுப்பதானது நிறைபேறான ஓர் தர்மமாகும். தர்கா நகரில் நாம் கல்வித்துறை மேம்பாட்டுக்காக ஓர் கல்வி நிலையத்தை ஸ்தாபித்துள்ளோம்.

முஸ்லிம்கள் மத்தியில் நேரத் திட்டமிடல் மிக முக்கியமானதாகும்.
நாம் ஐவேளை தொழுகையை சரியான நேரத்திற்கு நிறைவேற்றுகிறோம். அதே போல் எமது எல்லா காரியங்களிலும் நேரத் திட்டமிடல் மிக அவசியமாகும் என்றார்.
முஸ்லிம் சமூகத்திற்கு தலைசிறந்த புத்திஜீவிகளை உருவாக்கிக் கொடுக்க சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மௌலானா ஆற்றி வரும் தியாகப்பூர்வமான பணிகளையும் அவர் பெரிதும் பாராட்டினார்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *