உள்நாடு

இன்று மழைக்கு வாய்ப்பு

மேல், மத்திய, வடமேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். என இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், வடமத்திய மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன்,  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *