பழைய மாணவியர் சங்கத்தினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பத்ரியாவின் விஞ்ஞான ஆய்வு கூடம்
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியர் சங்கத்தினால் முழுமையாகப் புனர்நிருமாணம் செய்யப்பட்ட விஞ்ஞான கூடம் கடந்த 21ஆம் திகதி புதன் கிழமை விமர்சையாகத் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கம்பஹா வலய விஞ்ஞானப் பாடப் பிரதிக் கல்விப்பணிப்பாளர், கம்பஹா வலய தமிழ் மொழிமூலப் பாடாசலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர், அத்தனகல்ல கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், அயல் பாடாசாலை அதிபர்கள், அல் பத்ரியாவின் முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிருவாகத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பத்ரியா நலன்புரி சங்கப் பிரதிநிதிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விஞ்ஞான ஆய்வுகூடத்துக்காக உடல் உழைப்புக்கு மேலதிகமாக சுமார் 22 இலட்சத்துக்கும் அதிகமான செலவினை தம் அங்கத்தவர்கள் மூலம் நன்கொடையாகப் பெற்று பழைய மாணவியர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.