உள்நாடு

மினுவான்கொட, கல்லொலுவையில் உலமாக்கள் கௌரவிப்பு..!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மினுவான்கொட கிளை ஏற்பாடு செய்திருந்த உலமாக்களும், கல்விமான்களும் விருது கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) கல்லொலுவ ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மினுவான்கொட பிரதேசத்தை சேர்ந்த கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரப்புக் கல்லூரி மற்றும் ஜாமிய்யா நமீபியா அரபுக் கலாசாலை ஆகியவற்றிலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய உலமாக்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மினுவான்கொட கிளையின் தலைவரான அஷ்ஷெய்க் மௌலவி ரிஸ்வான் அவர்களின் தலைமையில் கல்லொலுவ ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள முன்னனி அரபுக் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறி, கௌரவிப்பிற்காக அழைக்கப்பட்ட 20 உலமாக்கள் தமது தந்தையர்களுடன் வந்து விருதுகளையும், பரிசில்களையும் பெற்றுச் சென்றனர்.

அத்தோடு கல்லொலுவ ஜும் ஆப் பள்ளிவாசலில் கீழ் இயங்கிவரும் ஹசனிய்யா தக்யா பள்ளிவாசலில் சுமார் 15 வருடங்களாக இமாமாகக் கடமையாற்றி விடைபெற்றுச் சென்ற அஷ்ஷெய்க் மௌலவி சப்ரி அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும் இப் பிரதேசத்தை சேர்ந்தவர்களும் இப் பிரதேசத்தின் அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்களாகக் கடமையாற்றி தற்சமயம் அதிபர் நியமனம் பெற்று மல்வானை மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் எம்.எம்.எம். ரிம்சான் அவர்களுக்கும், கல்லெலிய அலிகார் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் எம்.எஸ்.எம். சஸ்ரின் அவர்களும் இந்நிகழ்வில் விருதும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பல உலமாக்களை உலகுக்கு வழங்கியிருக்கும் கல்லொலுவ நிலாமிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகரும், தலைவரும் இன்றைய நிகழ்வின் பிரதம அதீதியுமான அல்ஹாஜ் முஹம்மது முனாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *