ஈரானிய Silver Moon சொகுசு கப்பல் தாய்லாந்து புறப்பட்டது..!
Silver Moon அதிசொகுசு பயணிகள் கப்பல் சுமார் 1000 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
இத்தாலியில் இருந்து ஆரம்பமான இந்த பயணிகள் கப்பலானது 18, 19 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதே தொடரில் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
213 மீற்றர் நீளம் கொண்ட இந்த Silver Moon பயணிகள் கப்பலானது இலங்கை முதற்தடவையாக இம்முறை வருகை தந்திருந்தமை
சிறப்பம்சமாகும்.
குறித்த கப்பலானது Colombo Shipping நிறுவனத்தின் மூலமாகவே இலங்கை வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் ஈரானிய அதி சொகுசு கப்பலானது இன்று (20)மாலை 6.30 மணியளவில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.