முதன்முறையாக இலங்கை வந்த சில்வர் மூன் (Silver Moon) அதிசொகுசு கப்பல்
சில்வர் மூன் (Silver Moon) அதிசொகுசு பயணிகள் கப்பல் சுமார் 1000 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இத்தாலியில் இருந்து ஆரம்பமான இந்த பயணிகள் கப்பலானது 18, 19 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அதே தொடரில் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
213 மீற்றர் நீளம் கொண்ட இந்த சில்வர் மூன் (Silver Moon) பயணிகள் கப்பலானது இலங்கைக்கு முதற்தடவையாக இம்முறை வருகை தந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
குறித்த கப்பலானது கொழும்பு ஷிப்பிங் (Colombo Shipping) நிறுவனத்தின் மூலமாகவே இலங்கை வந்தமையும் குறிப்பிடத்தக்கது.