விளையாட்டு

இலங்கையின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம். போட்டி அட்டவணை வெளியீடு

பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 ரி20 , 3 ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் ஆகிய போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (20) வெளியிட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைப் போட்டித் தொடர்களில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ரி20 ஆட்டம் இடம்பெறவுள்ளது. இப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம், 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஸைல்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 13,15 மற்றும் 18ஆம் திகதிகளில் சிட்டகொங் இல் பகலிரவுப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரையில் ஸைல்கெட் மைதானத்திலும், 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 3ஆம் திகதி வரையிலும் சிட்டகொங் மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இவ்வாறாக இவ்விரு அணிகளுக்குமான தொடரின் போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டது இலங்கை கிரிக்கெட் சபை. இதே வேளை இத் தொடருக்கான பங்களாதேஸ் அணியின் ரி20 மற்றும் ஒருநாள் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இவ் இரு அணிகளுக்கும் புதிய தலைவரான இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *