சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் ஹலால் தன்மையை அறிந்துகொள்ள புதிய QR அறிமுகம்..!
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களினதும் ஹலால் தன்மையை அறிந்து கொள்வதற்காக Beijing Al Baraka நிறுவனம் (https://bjbaraka.com) புதிய QR முறையினை அறிமுகம் செய்துள்ளது.
இதனை பதிவு செய்வதன் ஊடாக சீன நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் இஸ்லாம் தடைசெய்துள்ள கலவைகள் மற்றும் கொழுப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் குறித்த உணவுப் பொருள் அனுமதிக்கப்பட்டதா(ஹலாளா) அல்லது அனுமதிக்கப்படாததா (ஹறாமா) என்பதையும் அறிந்து கொள்ள முடியுமென Beijing Al- Baraka நிறுவனத்தின் தலைவர் எம்.எல்.அம்ஜத் தெரிவித்துள்ளார்.
(எம்.எல்.எஸ்.முஹம்மத்)