வெகு விமரிசையாக நடைபெற்ற பேருவளை நளீமியாவின் பொன் விழா நிகழ்வுகள்..
பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாண்டு நிறைவை யொட்டிய பொன்விழா நிகழ்ச்சியின் மற்றுமொரு தொடரின் வரலாற்று நிகழ்வு. இன்று பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் மர்ஜான் பளீல் கலந்துகொண்டார்.
விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம் மற்றும் கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழா நிகழ்வில் நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, நளீமிய்யாவின் ஐம்ப தாண்டு நிறைவையொட் டிய நினைவு முத்திரை வெளியீடு, கலாநிதி அரபாத் கரீம் நளீமி எழுதிய
‘ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்: எண்ணக்கருவும் தோற்றமும்’ என்ற வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்திற்கான ‘SOLAR POWER PROJECT’ சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் இந்நிகழ்வின்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கியர்மா கார் தென் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, வேர்வலை பிரதேச செயலாளர் ரஞ்சன் பேரா பேர்களை முன்னாள் தாரசபை தலைவர் மசாஹிம் முஹம்மத், ஸ்ரீலங்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் ஏ எச் எம். முக்தார் ஹாஜியார் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
(பேருவளை -பீ. எம். முக்தார் )