உகண்டாவை இலகுவாய் வீழ்த்திய இலங்கை உயர் செயற்திறன் அணி
சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்கும் இடையிலான 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் சகலதுறையில் பிரகாசித்த இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணி 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்று தொடரின் முன்னிலை பெற்றது.
14 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றில் பங்குபெறுவதற்காக இலங்கை வந்திருக்கும் உகண்டா தேசிய நுவணின்டு பெர்ணான்டோ தலைமையிலான இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் அணிக்கு எதிரான காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 7 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதற்கமைய இத் தொடரின் முதல் போட்டி இன்று காலை ஆரம்பித்தது.
இப்போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய உகண்டா அணி மல்ச தருப்பதி , இசித்த விஜேசந்தர மற்றும் டனால் ஹேமந்த ஆகியோரின் அசத்தல் பந்துவீச்சில் நிலைகுழைந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தினேஷ நக்ராணி மற்றும் பிரைன் மஜாபா ஆகியோர் தலா 29 மற்றும் 21 ஓட்டங்களைப் பெற்றனர்.
பின்னர் 88 ஓட்டங்கள் என்ற இலகுவாக வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த இலங்கை அணிக்கு அணித்தலைவரான நுவணின்டு பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் , சொனால் டி லிவேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் உகண்டா சார்பில் துடுப்பபாட்டத்தில் அசத்திர் தினேஷ நக்ரானி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அ)
(அரபாத் பஹர்தீன்)