நாகூர்கம வித்தியாலயத்தில் சிரமதான பணி..
மாவனல்லை நாகூர்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் அதன் அதிபர் கே.எம். பஹ்மி அவர்களின் தலைமையில் சிரமமான பணியொன்று அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அபிவிருத்தி சங்க போஷகரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் கமால்தீன் மரிக்கார் அவர்கள் சிரமதான பணியை ஆரம்பித்து வைத்த இவ் நிகழ்வில் மஸ்ஜிதுல் முனீர் பள்ளி வாசல் தலைவர் ஸாலி ஏ மஜீத்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜனாப் ரிஸ்வான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(அரநாயக்க செய்தியாளர்- பாரா தாஹீர்)