குஜராத் முதல்வருடன் அனுர குழுவினர் பேச்சு..
இந்தியாவுக்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (07) குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) அவர்களுடன் காந்திநகரின் கட்டளைப் பேரவையில் (மாநில சட்டவாக்கப் பேரவை) சந்திப்பினை மேற்கொண்டார்கள். மாநிலத்தில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் மாநில நிருவாகச் செயற்பாங்கு சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் அந்த மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட சந்திப்பு இடம்பெற்றதோடு, இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரியாக பாவிக்கப்படுகின்ற “குஜராத் எடுத்துக்காட்டு” (Gujarat Model) பற்றிய சமர்ப்பணமொன்றும் இடம்பெற்றது. வலுச்சக்தி மறுசீரமைப்பு, விவசாயமும் நீரும், உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்தல், கைத்தொழில் மற்றும் முதலீடு, சுகாதாரப் பாதுகாப்பும் பெண்களுக்கு வலுவளித்தலும் என்பவை இந்த குஜராத் எடுத்துக்காட்டின் பிரதானமான பிரிவுகளாகும்.
அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்கள் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களின் அவதானிப்புச் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.