விளையாட்டு

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கான் அணி அறிவிப்பு..

இலங்கை அணிக்கு எதிராக கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கான் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூவகை போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தற்சமயம் ஒற்றை டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இத் தொடருக்கான ஹஸ்மத்துல்லாஹ் ஷஹீடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்க மிக நீண்ட இடைவெளிக்குப் பின் அனுபவமிக்க வீரரான முஹம்மத் நபி அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரஷீட்கானுக்கு காயம் இன்னும் குணமடையாதமையால் இத் தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளரான நூர் அஹமட் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் சகலதுறை வீரர்களான குல்படின் நைப் மற்றும் அஸ்மதுல்லாஸ் ஒமர்ஷாய் ஆகியோருடன் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர்களான ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் மற்றும் இக்ராம் ஆகியோர் இக் குழாத்தில் உள்ளடங்குகின்றனர்.

துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்த ரஹ்மத் ஷா, இப்ராஹிம் சத்ரான் ஆகியோரும் சுழல்பந்து வரிசையில் முஜிபுர் ரகுமான், குவய்ஸ் அஹமட், வேகப்பந்து வீச்சிக்கு பரூக்கி ஆகியோரும் உள்ளடக்கப்பட்ட பலமிக்க ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *