உள்நாடு

கண்டி மீரா மக்காம் பள்ளியில் சுதந்திர தின நிகழ்வு.

76 வது சுதந்திரன தின விழா கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலில்
கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனம். கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் மற்றும் கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபை ஆகிய இணைந்து நடத்திய 76 வது சுதந்திரன தின விழா கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி மாநகர சபையின் ஆணையாளர் சிஹான் விஜேயதிலக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் முன்னாள் கண்டி மாகர முதல்வர் சேகர சேனாநாயக, கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் தலைவரும் கண்டி மாநகர சபையின் பிரதி முதல்வருமான இலாஹி ஆப்தீன், கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி பாயிஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள். காவல்துறையினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டின் அபிவிருத்திக்கும் சுவிட்சத்திற்கும் விசேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *