உள்நாடு

மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த

(2024.01.31 – ஊடக சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் )

இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார். ஒரு பொலீஸ் குழுவிற்கு அவசியமாகி இருந்த, மறைந்திருந்த நிகழ்ச்சி நிரலொன்றின் செயற்பாங்கு என்றவகையிலேயே அந்த பொலீஸ் உத்தியோகத்தர் இறந்தார். அவர் ஒரு சார்ஜன்ட் பதவி வகித்தவராக இருந்து இறந்த பின்னர் எஸ்.ஐ. பதவிக்கு மாற்றபட்டுவிட்டால் நியாயம் கிடைக்குமா? அந்த பொலீஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு கணவனையும் பிள்ளைகளுக்கு தகப்பனையும் இல்லாதொழிப்பதை விட தேஷபந்துவின் பதில் பொலீஸ் மா அதிபர் நிலையை பொலீஸ் மா அதிபராக மாற்றுவது பெரியதா? நாரம்மல அப்பாவி மனிதனின் மனைவிக்கு கணவனையும் அவரது உலகத்தையும் இல்லாதொழித்து, மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனையும் அவர்களின் உலகத்தையும் இல்லாதொழித்து தான் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். அதனை பத்திலட்சத்திற்கு சுருக்கிவிட முடியுமா? தேஷபந்து இந்த பத்திலட்சங்களை கொடுத்துக்கொடுத்துக்கொண்டே போக நேரிடும். தான் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கியவருக்கு சொந்தப் பணத்தில் இருந்து ஐந்து இலட்சத்தை செலுத்துமாறு உயர்நீதிமன்றம் தேஷபந்துவிற்கு கட்டளையிட்டது. இந்த மனிதாபிமாமற்ற சித்திரவதையை 05 இலட்சத்திற்கு சுருக்கிவிடவும் முடியாது. சட்ட மா அதிபர் சரிவர சட்டத்தை அமுலாக்கினால் வருங்காலத்தில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் சம்பந்தமாக குற்றப்பகர்வொன்று வரவேண்டும்.

இவ்விதமாக மனிதர்கள் ஆங்காங்கே நாய்கள் போல் செத்து மடிவதும், அது அரசாங்க பொலீஸினால் இடம்பெறுவதாயின் அது அரச பயங்கரவாதமாகும். அவ்வாறான செத்துமடிதல்கள் காரணமாக உருவாகின்ற அதிர்ச்சியைத்தான் நாங்கள் சமூகமயப்படுத்துகிறோம். இவ்விதமாக காரணமின்றி ஒருவரை கொலைசெய்தலானது அந்த குடும்பத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும். இந்த அதிர்ச்சி சமூகத்தை சென்றடையவேண்டும். தமக்கு ஏதாவது நேரிடும்வரை ஒத்துணர்வு தெரியமாட்டாது. உங்களுக்கோ, உங்கள் குடும்ப அங்கத்தவருக்கோ அல்லது உறவினருக்கு ஏற்பட்டால் இதன் தாற்பரியம் புரியும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தேஷபந்துவை ஹெல்மட்டினால் மக்கள் தாக்கியபோது தப்பான இடத்தில் பட்டிருந்தால், ஏதாவது வேதனை ஏற்பட்டிருந்தால் மனைவியும் பிள்ளைகளும் அந்த அதிர்ச்சியை உணர்ந்திருப்பார்கள். பதில் பொலீஸ் மா அதிபர் தனது தொனிப்பொருள் வாசகத்தைப் பார்த்திட வேண்டும். ” தம்மே பவே ரக்கிதி, தர்ம சாரீ” தர்மவழியில் நடப்பவனை தர்மம் தலைகாக்கும் என்பதாகும். தொனிப்பொருள் வாசகம் அதனைத்தான் கூறுகிறது. தனது பதவி அதிகாரத்திற்கு வருங்காலத்தில் எடுக்கவுள்ள புரமோஷனுக்கு தனது தொனிப்பொருள் வாசகத்தின்படி செயலாற்றாமல் நடந்துகொள்ள வேண்டாம்.

பதில் பொலீஸ் மா அதிபர் மே 09 சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளில் ஒருவராவார். அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளயில் மேல்மாகாண வடக்கு (நீர்கொழும்பு) சீனியர் டீ.ஐ.ஜீ. கட்டுவாபிட்டியவில் மனிதப்படுகொலை இடம்பெற்றது. நீதியின் மறைவில் இருந்துகொண்டு அநீதி இழைக்கப்படுமானால் சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் நாங்கள் அதனை எதிர்ப்போம். நீதியின் பெயரால் இந்த நாட்டில் போதைப்பொருள், குற்றச்செயல்கள், பாதாள உலகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் நாங்கள் இருகரங்களையும் உயர்த்தி ஆதரவு தெரிவிப்போம். ஆங்காங்கே மனிதர்கள் செத்துக்கிடப்பதன் மூலமாக அரசியல் தலைமையின், சமூகத்தின், பொருளாதாரத்தின் சீரழிவே வெளிக்காட்டப்படுகின்றது. இந்த நாடு ஒரு தரிசுநிலமல்ல, குடிமக்கள் – மக்கள் – மனிதர்கள் நிறைந்த சமூகமாகும் என்பதை தேஷபந்துவிற்கு கூறுகிறோம். நீங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளீர்கள். மக்களை நேசிப்பவர்கள் அல்ல. தர்மவழியில் பயணிக்குமாறு பொலீஸ் மா அதிபரை பாதுகாக்கின்ற அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறோம். அப்படிச் செய்தால் தர்மம் தலைகாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *