மக்களின் விருப்பத்துடன் நியமிக்கப்படுகின்ற திசைகாட்டியின் அரசாங்கத்தினால் மாத்திரமே சட்டம் சரிவர அமுலாக்கப்படமுடியும்.. -சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார
(2024.01.31 – ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் )
1992 காலப்பகுதியில் படுகொலை கலாசாரமொன்று நிலவியது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வந்தார்கள். குற்றச்செயல்கள் பொதுநிலைப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கு நிலவியது. அதைப்போலவே தேர்தல் காலங்களில் வன்முறைச் செயல்கள் காரணமாக ஆட்கள் உயிரிழந்ததை நாங்கள் கண்டோம். எனினும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த கலாசாரம் ஓரளவு தணிந்தது. அண்மைக்காலமாக நாளாந்தச் செய்தித்தாள்களில் எத்தனை கொலைகள் இடம்பெற்றன என்பதை வாசிக்கிறோம். அரசாங்கத்தால், பொலீஸாரினால், தவறுதலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த படுகொலை மனிதர்களின் மண்டைகளில் பொதுமைப்படுத்தப்படுவதன் மூலமாக இதனைக் கேள்விக்குட்படுத்துவது நிறுத்தப்படுகின்றது. அத்தகைய நிலைமையில் இவை துரிதமாக அதிகரிக்கின்றன.
இது ஒரு தேர்தல் வருடம். “தேர்தல் காலங்களில் இவை இடம்பெறுவது சகஜம்” என மக்கள் மௌனம் சாதிப்பார்கள். இவை அரசாங்கத்தின் அரசியல் கலாசாரத்தினால் உருவாக்கப்படுகின்ற நிலைமையாகும். ஒரு நாட்டில் தவறு புரிந்தால் கைதுசெய்யப்படல் வேண்டும். வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். நீதிமன்ற முறைமைக்குப் புறம்பாக மக்கள் மடிவது “நல்லது, அவன் பாதாள உலகக்காரன், தூள் பாவிப்பவன்” என மௌனமாக இருக்கவேண்டாம். ஏனென்றால் அது பொலீஸ் ஊடகப் பேச்சாளரோ, எவரேர ஓர் அமைச்சரோ கூறுகின்ற விடயமாகும். அதனால்த்தான் பொலிஸ் அமைச்சரும் தேஷபந்து தென்னக்கோனும் கூறுகின்ற விடயங்கள் மற்றும் நடந்தகொள்கின்ற விதம் பற்றிய எமது கடுமையான விமர்சனம் நிலவுகின்றது.
இந்த நிலைமையை உருவாக்கியதே இந்த நாட்டின் அரசியல் கலாசாரம்தான். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா கோட்டாபய ராஜபக்ஷ கூறினார் “எனது வார்த்தைகள்தான் சுற்றுநிருபங்கள்” என. ரணில் விக்கிரமசிங்க போய் “எனக்கு போஸ்ற் ஒபீஸை தருவீர்களா? இல்லையா?” என அச்சுறுத்தல் விடுக்கிறார். பொலீஸ் அமைச்சர் “அடித்தால் அடிக்கவேண்டும்” என்கிறார். அவர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு உண்டு. எவரையும் கைதுசெய்வதற்கான அதிகாரம் உண்டு. எனினும் இவ்வாறு செய்வதனால் கீழ்நோக்கிச் செல்கின்ற செய்திதான் ” நீங்கள் என்ன தவறு புரிந்தாலும், எந்த மனித உரிமையை மீறினாலும் நாங்கள் அரசாங்கம் என்றவகையில் பார்த்துக்கொள்வோம்” என்பது. அப்போதுதான் நாரம்மல போன்ற சம்பவங்கள் இடம்பெறும். இதனை விமர்சித்தது நாங்கள் மாத்திரமல்ல. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இதனை விமர்சித்துள்ளது. அதனால்த்தான் பொலீஸ் ஆணைக்குழு ” நாட்டு மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்க வகையில்” செயலாற்றுமாறு தேஷபந்துவிற்கு கூறியுள்ளது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்கவகையில் சட்டத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கூறுகிறோம். அந்த ஆற்றல் தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் மக்களின் விருப்பத்துடனேயே ஆட்சிக்கு வருவோம். மக்களின் விருப்பத்திற்கு முரணாக அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கங்களே இத்தகை அடக்குமுறைசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முனைகின்றன. அதனால் நாங்கள் சமூகத்தைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கின்றது.