உள்நாடு

தலை நகரில் தமிழ்க் கவிதை அமைப்பாக தலை நிமிர்ந்து நிற்கும் “வலம்புரி கவிதா வட்டம்” – பௌர்ணமி தினம் (25) பொழிந்த அதன் 96 ஆவது கவியரங்கு மழை..

தலை நகரில் தமிழ்க் கவிஞர்களின் தேசிய அமைப்பாக வெற்றி நடை போடும் “வலம்புரி கவிதா வட்டம்” மாதாந்த பௌர்ணமி தினத்தில் நடாத்தும் அதன் கவியரங்க வரிசையில் 96 ஆவது கவியரங்கு மழையை, ஜனவரி மாதத்தின் பௌர்ணமி தினமான 25 ஆம் திகதி வியாழக்கிழமை பொழிந்தது.
கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கவியரங்கு நிகழ்வினை, வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்த, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையையும், பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரையையும் வழங்கினர். வகவ ஸ்தாபக உறுப்பினர் “சத்திய எழுத்தாளர்” எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார்.
வகவத்தின் 96 ஆவது கவியரங்கிற்கு, கவிஞர் பவானி சச்சிதானந்தன் தலைமை தாங்கினார்.
கவியரங்கில் “கவிஞர் திலகம்” எம். பிரேம்ராஜ், வதிரி சி. ரவீந்திரன், பதுளை ஒகஸ்டீன் கபிலகன், தி. ஸ்ரீதரன், வாழைத்தோட்டம் எம். வஸீர், ராஜா நித்திலன், வாசுகி பி. வாசு, இ. கலைநிலா, ரகீப் அல் ஹாதி, “சிந்தனைப் பிரியன்” முஸம்மில், எம். என். அய்யான் அஹமத், எம். எச். ரஷீத் அல் ஹாமி, கிண்ணியா அமீர் அலி, “இளநெஞ்சன்” முர்ஷிதீன், மஸீதா அன்சார், ந. தாமரைச் செல்வி, “உணர்ச்சிப் பூக்கள்” ஆதில், காலஞ்சென்ற இலக்கியவாதி மாவை வரோதயன் மகன்  ச. அருணன், அமீன் பவாஸ், ஆர். தங்கமணி, பி. தங்கவேலு, “மலாய்கவி” டிவாங்ஸோ, அருந்தவம் அருணா, ரிஸ்மினா ரபீக், “பிறைக்கவி” முஸம்மில் ஆகியோர் கவிதை பாடி, வந்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இதன்போது, எம்மை விட்டும் மறைந்த “வீரகேசரி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன் அவர்களின் மாமியார், கலைஞர்கள் கே.எம்.எம். நசீர், “ஜோபு” நஸீர், “கலைவாதி” கலீல் அவர்களின் மனைவி ஆகியோருக்கான மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கவிஞர்கள் ரவூப் ஹஸீர், ஏ.கே. இளங்கோ, “கவிநேசன்” நவாஸ், எம்.பீ.எம். சித்தீக், இல்யாஸ் தாஸிம், பி. சுசீலா, சு. ஜெகதீஸ்வரன், எம்.எம். நவாஸ்தீன், “கவிதா இளங்கோ” ஜே. கமல்ராஜ், தி. கௌதம் போன்றோர், கவி மலர்களால் சபையை அலங்கரித்தனர்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *