உள்நாடு

முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிப்பு..!

வற் வரி அதிகரிப்புக் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை நேற்று (21) முதல், 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை, 43 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும், ஆனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *