விளையாட்டு

இலங்கை வரும் ஆப்கானிஸ்தான், போட்டித் தொடரில் அட்டவணை வெளியீடு.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூவகை கிரிக்கெட் தொடருக்குமான போட்டி அட்டவணையினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 ஆகிய முழுமையான தொடரில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று இலங்கை கிரிக்கெட் சபை ஊடக அறிக்கையின் மூலம் இப்போட்டிக்கான தினம் மற்றும் மைதானம் அடங்கிய அட்டவணையை வெளியிட்டது. அதற்கமைய ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை வருகை தரவுள்ளது. பின்னர் இச் சுற்றுப் பயணத்தின் முதல் தொடராக ஒற்றை டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. அதற்கமைய பெப்ரவரி 9, 11 மற்றும் 14ஆம் திகதிகளில் பகலிரவுப் போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதியாக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகள் 17,19 மற்றும் 21ஆம் திகதிகளில் இரவுப் போட்டிகளாக ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *