இலங்கை பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிநாட்டில் தொழில் புரியும் முதல் எம்.பீ
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நயன ராசனதிலக்க இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது வெளிநாட்டில் தொழில் புரியும் ஒருவராவார்.
வெளிநாட்டில் தொழில்புரியும் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்திற்குத்; தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். கடந்த வெள்ளியன்று தெரிவான இவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடைய உறவினராவார். எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியும், நயன வாசனதிலக்கவின் மனைவியும் உறவினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் 31,307 விருப்பு வாக்குகளை பெற்றிருந்த நயன வாசனதிலக்க, பதுளை மாவட்டத்தின் பிரபல சமூக சேவையாளரும், தனவந்தருமாவார். இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக வெளிநாட்டிலே தொழில்புரியும் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வந்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இது தொடர்பாக வாசன திலக்கவிடம் கேட்டபோது, கட்டாயமாக இலங்கை பாராளுமன்றத்தில் வெளிநாட்டில் தெரிழ்ல்புரிகின்ற இலங்கையர்கள் பலர் பாராளுமனற்த்தில் உறுப்பினர்களாக வரவேண்டியது அவசியமென தெரிவித்தார்.
ஆவஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் நீண்ட காலம் பணிபுரிந்த இவர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 31,307 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களில் அடுத்ததாக இருந்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமிந்த விஜயசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து இவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 90 மில்லியன் கொடுத்து எடுத்ததாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து கருத்து தெரிவித்த இவர், பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் யாராவது அப்படி பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவாரா என கேள்வி எழுபபினார். பாராளுமன்றம் இன்னும் சில மாதங்களில் கலைக்கப்படவிருக்கும் போது ஏன் பெருந்தொகையான பணத்தை கொடுத்து இந்தப் பதவியை பெறவேண்டுமென்றும் வாசன திலக்க கேள்வி எழுப்பினார்.
தியத்தலாவையை பிறப்பிடமாகக் கொண்ட விவசாய குடும்பத்தில் பிறந்த வாசன திலக்கவின் தாயார் ஒரு ஆசிரியராவார். தந்தை சுகாதார பரிசோதகராவார். பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்று அதன் பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்று அங்கு ஹோட்டல் முகாமைத்துவப் பட்டதாரிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு வந்து ஹில்டன் ஹோட்டலில் ஒரு நிறைவேற்று உத்தியோகத்தராக இணைந்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமையை பெறுபவர் என்று கூறப்படும் வதந்தியை வாசன திலக்க மறுத்துள்ளார்.
(செய்தி – உதவி நிருபர் நிஹார்)