உள்நாடு

அஹமத் துரை நினைவு மலர் வெளியீடு

சாய்ந்தமருது ரின் முதுசம் மர்ஹூம் அஹ்மத் (துரை) அவர்கள் நினைவாக அவரது பிள்ளைகள் இணைந்து எழுதிய அஹ்மத்துறை எனும நினைவு மலர் வெளியீடு அகமது துறை நலன்புரி நிதியத்தினால் 07.01.2024 வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நுாலை, நுாலாசிரியைக் குழுக்களாக பத்ஹதுல் அல்மா அஹமத் காதர் மொஹிதீன்,, ஜிப்ரித் அஹமத் ஆதம்பாவா மற்றும் ஏ.எல். நப்ரிஸ் அஹமட் ஆகியோர்கள் எழுதியுள்ளனர்.
இந் நுால் வெளியீட்டுக்கு அஹமத காலித் அஹ்மத் தலைமை வகித்தார் வரவேற்புரையை எம்.வை.பாவா, வெளியீட்டு உரையை பத்ஹதுல் அல்ழா காதர் மொஹிதீன், சிறப்பு மலர் அறிமுக உரையை சட்டத்தரனி சபானா குல் பேகம் சியாத், கவிதை ஏ.எல் நப்ரிஸ் அஹமட், மலர் நயப்புரை காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரீப்தீன், கவிதை சிறராஜ் மொஹிடீன், சிறப்புரை அஷ்ஷேக் எப்.எம்.எஸ்.ஏ அன்ஸார மொளலானா (நளிமி) நன்றியுரை பொறியிலாளர் எம்.ஜ.அப்துல் லத்தீப் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள்.

இங்கு உரையாற்றிய அன்ஸார் மௌலானா – சாய்ந்தமரு ஈன்றெடுத்த சிறப்புமிக்க ஒர் புதல்வர் அஹமத்துறை அக் காலத்தில் சகல சமூகங்களுக்கும் சேவை செய்த ஒர் மனிதர் பொலநறுவையில் அவர் விவசாய அதிகாரியாக பணியாற்றி காலத்தில் நிறுவப்பட்ட அஹ்மத் பாம், அஹமத் கிராமம் இன்றும் உள்ளது. அத்துடன் காலம் சென்ற பிரதமர் டி.எஸ் சேனாநாய்ககாவினால் விவசாயம் ,நீர்ப்பாசனம், வரட்சி காலத்தில் விவசாயத்தை ஊக்குவித்த மைக்காக அஹமத்துறை பாராட்டுப் பெற்றவராக விளங்கியுள்ளார். அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் தர்மா கர்த்த சபை செயலாளராக இருந்தும் சேவையாற்றியுள்ளார். பொலநருவை, மட்டக்களப்பு, அம்பாறை என்ற மூன்று மாவட்டத்திலும் பிரிட்ஷார் காலத்திலிருந்து அவர் வேளான்மை பயிர்ச் செய்கையை இப்பிரதேச மக்களுக்கு ஊக்குவித்துள்ளார். இவர் மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம் போன்ற கிரிஸ்த்துவ,பாடசாலைகளில் பயின்று அவர் பெற்ற விவசாய கல்வி டிப்ளோமா ஊடாக மேலும் விருத்தி செய்து சேவை செய்துள்ளார். ஆகவே எதிர்காலத்தில் தற்போதைய சமுதாயம் அந்த மனிதருக்காக தேசிய ரீதியில் அஹமத்துறைக்காக ஓர் நினைவு முத்திரை வெளியிட வேண்டும். எனவும் மௌலானா அங்கு வேண்டிக் கொண்டார் அவரது 4 தலைமுறைக்கான குடும்பங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கல்வியில் முன்னேறி சேவையாற்றி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மண்டபம் நிறைந்து உறவினர்கள் ,சாய்ந்தமருதுார் பெரியார்கள் காணப்பட்டன. அனைவருக்கும் இலவசமாக நுால்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அஹமத்துறை நலன்புரி நிதியம் இவரது குடும்பத்தினாரல் ஆரம்பிக்க்ப்பட்டு நிதியளிக்கப்பட்டு கல்முனை, சாய்ந்தமருதுார் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மற்றும் பாடசாலைக் கல்வியை பயில வசதியற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி, வருகின்றமையும் குறி்ப்பிடத்தக்கது.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *