விளையாட்டு

சாஹிரா Super 16 கால்பந்து தொடரில் சம்பியனானது கொழும்பு சாஹிரா

கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் தலைவர்களின் சங்கம் நடத்திய நோலிமிட் சாஹிரா சுப்பர் 16 கால்பந்து போட்டியில் அலிதியா சர்வதேச பாடசாலையை வீழ்த்தி சாஹிரா கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இந்த தொடரில் 16 பாடசாலை அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் கொழும்பு சாஹிரா 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பிரதான அனுசரணையாளர் நோலிமிட் சந்தைப்படுத்தல் முகாமையாளர் பவாஸ் மொஹமட் வெற்றி பெற்ற அணித் தலைவர் முபத்தல் சியார்ட் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு சம்பியன் கிண்ணம், ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *