விளையாட்டு

உலகக் கிண்ணத்திலிருந்து மற்றுமொரு இலங்கை வீரர் விலகல்

வலைப் பயிற்சியின் போது இடது காலில் உபாதைக்குள்ளாகிய இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமாரவின் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து, லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமீரவை அணியில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியையும் ஐசிசி இன் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று (30) நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமீர விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவுக்குப் பதிலாக திமுத் கருணாரத்ன இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *