விளையாட்டு

இலங்கை அணியில் இணையும் அஞ்சலோ மத்தியூஸ்

உபாதை காரணமாக உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரணவுக்கு பதில் அனுபவ சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை அணியுடன் இணைந்து கொண்டுள்ளர்.

இதற்கான அனுமதியையும் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களாக அஞ்சலோ மத்தியூஸுடன் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பலவீனமடைந்திருக்கும் இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வகையில் மத்தியூஸை அணியில்

மதீஷ பதிரணவின் வலது தோள்பட்டையிலேயே காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆரம்பத்தில் பத்து நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டபோதும் அதனைத் தொடர்ந்தும் அவரின் பந்துவீசும் கையில் வலி இருந்தது. இதனை அடுத்தே அவரை அணியில் இருந்து நீக்குவதற்கு ஐ.சி.சி தொழில்நுட்பக் குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்காக ஐ.சி.சி ஒப்புதல் கிடைத்ததை அடுத்து அவர் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பினார். எனினும் மதீஷ பதிரண ஆடிய முதல் இரு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 90 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களை விட்டுக்கொடுத்து சோபிக்கத் தவறி இருந்தார்.

ஏற்கனவே இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானகவும் முன் தொடை பகுதியில் ஏற்பட்ட உபாதையால் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவருக்கு பதில் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைக்கப்பட்டபோதும் அவர் எதிர்பார்க்கப்பட்ட அளவு சோபிக்கத் தவறி வருகிறார்.

மறுபுறம் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவின் பின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கும் சூழலில் அவர்  இன்று (26) நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் இருந்து வருகிறது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டி இன்று பெங்களுர், சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனுபவ வீரரான அஞ்சலோ மத்தியூஸ் இறுதிப் பதினொருவரில் இடம்பிடிக்காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர் அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடியதில்லை. அவர் இலங்கை அணி தேர்வுக்காகவும் இடம்பெறவில்லை.

உலகக் கிண்ணத்தில் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணி ஒன்றில் மாத்திரம் வென்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *