உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்க்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல், தென் மாகாணங்கள், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில், மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 10 மாவட்டங்களின் சில பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *