உள்நாடு

உள்நாடு

“தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே” – திஹாரியில் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு..!

முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) திஹாரியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “உலமா என்ற போர்வையில், சஹ்ரான் காடைக்குழு செய்த இழி செயலால், முஸ்லிம்கள் அனுபவித்தவற்றை எண்ணிப்பாருங்கள். இளைஞர்களை  தவறான உணர்ச்சிப்பாதைக்குள் ஈர்க்க முனையும் அரசியல் சித்தாந்தம் முழு நாட்டுக்குமே ஆபத்தானது. இவ்வாறு இருக்கையில், முஸ்லிம்  தலைமைகளை  வீணாக விமர்சிக்கும் ஒரு சில உலமாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியுள்ளது. ஆயுதக் கவர்ச்சியில் அகப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சீரழிவதையும் சமூகம் நாசமடைவதையும் தவிர்ப்பதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரப்  தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ  முஸ்லிம் இளைஞர்கள்  பங்கேற்கவில்லை. இதனால், நமது சமூகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தன்னைத் தானே உலமாவென  சுயமகுடம்  சூட்டிய சஹ்ரானின்  செயற்பாடு, முழு முஸ்லிம்களையுமே சீரழித்தது. ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மார்க்கமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிப்படைகள் எடுத்த இந்த முயற்சிகளை அடியோடு எதிர்த்தோம். இதனால், என்னைச்  சிறையில் அடைத்தனர். எனது குடும்பத்தையே பழிவாங்கி வெஞ்சம் தீர்த்தனர். கொரொனா ஜனாஸாக்களை எரித்தபோதும் நாங்களே கொதித்தெழுந்தோம். அரபு நாடுகளோ, முஸ்லிம் ஆட்சியாளர்களோ எதையும் பேசவில்லை.  அமைச்சர் அலிசப்ரியோ, தொலைபேசியை “ஓப்f” செய்துவிட்டு ஒளித்துவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் நாங்களே மீள்குடியேற்றினோம்.  கண்டி,  திகனை, அழுத்கமை மற்றும் அம்பாறை பற்றி எரிந்த வேளையில் களத்தில் நின்று காரியமாற்றியதுடன், நெருப்பை அணைத்ததும் நாங்களே! 

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்களும், வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களும் அதிகரிப்பு..!

சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புகளின்படி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக

Read More
உள்நாடு

பஸ்கள் மோதியதில் 47 பேர் காயம்..!

பிபில, நாகல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது பின்னால் இருந்து மற்றுமொரு பஸ் மோதியதில் 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கு‌றி‌த்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலை

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் சுமந்திரனின் சட்டமூலத்தை நீக்கச் செய்தது ரணிலின் முறையற்ற செயல்..! -மன்னாரில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடும் கண்டனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  அங்கீகாரம் அளித்துவிட்டு ,தனக்கு ஆதரவு அளிக்காத சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிரலிலிருந்து நீக்கச் செய்திருப்பதன்  மூலம் பாராளுமன்றத்தின்

Read More
உள்நாடு

சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுனர் முஸம்மில்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது மாக ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு செப்டெம்பர் 4 ஆம் திகதி ITC ரத்னதிப சங்கம் மண்டபத்தில் இடம்பெற்றதோடு, இதில் சிறப்புக் கருத்துரையாளராக

Read More
உள்நாடு

ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தரும் பயிற்சிநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர்களினது நன்மை கருதி ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையத்தில் பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறுகிய கால பயிற்சிநெறிகளாக மிகவும் குறைந்த கட்டணத்தில் குறித்த

Read More
உள்நாடு

பதவி நீக்கப்பட்ட நான்கு இராஜாங்க அமைச்சர்கள்..!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக

Read More
உள்நாடு

தலைவர் ஒருவருக்கு எந்த அணியுடனும் இணைந்து பணியாற்றும் வல்லமை இருக்க வேண்டும்.மத்துகம கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க..!

தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர்

Read More
உள்நாடு

கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 16 தேர்தல் வன்செயல்கள்

2024 ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடையதாக கடந்த 27 ஆந் திகதி தொடக்கம் இற்றவைரையான காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக 16 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை

Read More