உள்நாடு

இன்று அதிக வெப்பம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்களில் இன்றையதினம் மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பம் அதிகளவில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்.

வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றவும்

அதன்படி, வேலைத்தளங்களில் பணியாற்றுவோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.

வெள்ளை அல்லது மெல்லிய நிறத்திலான, இலகுவான ஆடைகளை அணிவது சிறந்தது.

முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும். 

குறிப்பாக, சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், அதிக சோர்வைத் தரக்கூடிய கடினமான வேலைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *