உள்நாடு

கணித ஒலிம்பியாட் போட்டியில் அங்குநொச்சிய அல்மாஸ் மாணவன் உமைர் மாகாண மட்டத்தில் முதலிடம்.

கெப்பித்திகொல்லாவ கல்வி வலய அங்குநொச்சிய அல்மாஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 06 ல் கல்வி பயிலும் மாணவன் ஆர்.உமைர் மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரின் தொடர் வெற்றிக்கு அயராது பாடுபட்ட கணித ஆசிரியை கே.முபாசா  பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்க்களை தெரிவித்து கொள்வதாக அதிபர் ஏ.பீ. அமான் தெரிவித்தார்.

இவர் இஹலஅங்குநொச்சிய  எஸ் .ஐ.றம்ழான் ( ஆசிரியர்) எம்.ஏ.ஹம்ஷியா (ஆசிரியை ) ஆகியோரின்  புதல்வராவார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *