சீனன்கோட்டை முர்ஸிய்யா ஸாவியாவில் பணப் பரிசில் வழங்கும் நிகழ்வு.
பேருவளை சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தை முர்ஸிய்யா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் இரவு நேரத்தில் 30 நாட்கள் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கு பணப் பரிசில் வழங்கும் வைபவம் மேற்படி ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.
சீனன் கோட்டைப் பள்ளிச்சங்கத் தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீட உப தலைவருமான ஏ.எச்.எம். முக்தார் ஹாபஜியார், மேற்படி ஸாவியாவின் உபகுழு அங்கத்தவர்களான அஸ்செய்க் எம்.எஸ்.எம். றிழ்வான் (நளீமி), ரயீஸூல் ஹக் மஸீஸ், ஹம்ஸா ஹஸன், இஸ்மத் ராஸிக், அல்தாப் முஹம்மத், ரியாஸ் ஸனூன், ரிகாஸ் ஸாலி, ஹனான் சரீப், அப்ராஸ் உனைஸ், ஆகியோரின் வழிகாட்லின் கீழ் ஸாவியா இமாம்களான மௌலவி ஹாபிஸ் முஹம்மத் நுஸ்கி, மௌலவி ஹாபிஸ் முஹம்மத் நப்ருல்லா, ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேசத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் இம் மஜ்லிஸில் பங்குபற்றினர். ஸாவியாவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீட தலைவருமான அல்ஹாஜ் யாகூத் நளீம், உப தலைவர்களான அஸ்செய்க் எம்.எஸ்.எம். றிழ்வான் (நளீமி), அல்ஹாஜ் எம். ஸப்வான் நயீம், இணைச் செயலாளர்களான கலீபதுச் சாதுலி அஸ்செய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), அல்ஹாஜ் ரம்லான் அரூஸ், மற்றும் பஹ்ரி அனஸ் (நளீமி) உற்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.






பேருவளை : பீ. எம் முக்தார்.
