உள்நாடு

கொழும்பு டீ. எஸ். கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள்

கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்களுக்கான மருத்துவ திட்டம் 20 வருடங்கள் பூர்தியை முன்னிட்டு நினைவு முத்திரையும். நாணயம் வெளியீடும் நிகழ்வு

24.03.2026 கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் ஆர்.ரீ. அலஸ் கூட்ட மண்டபத்தில் பழைய மாணவர்கள் 88 குழுவின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் பேராசிரியர் அலேக்கா பத்திரன, முன்னாள் பீடாதிபதி மருத்துவ பீடம், -ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகம், கௌவர அதிதியாக பேராசிரியர் அஜித் மலலசேகர

பேராசிரியர் மருத்துவ பீடம் கொழும் பல்கலைக்கழகம் , தபால் திணைக்களத்தின் தபால் மா அதிபர் ஆர்.பி பத்மகுமார் தற்போயை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி அதிபர் சம்பத் வீரக்கொட
மற்றும் பழைய மாணவர் தலைவர் லசந்த வித்தாரன. இம் மருத்துவ திட்டத்திற்கான தலைவர் மதுர விக்கிரமரத்தின மற்றும் 88 குழுவின் இத் திட்டத்தை கடந்த 20 வருடங்களாக முன் எடுத்துச் செல்லும் டாக்டர் துசார குணதிலக்க மற்றும் பழைய மாணவர் தலைவர் ஹுசைன் சாதிக் உட்பட மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அதிபர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்

ஒர் மாதத்திற்கு மருந்துகளுக்கு மட்டும் 5 இலட்சம் ரூபா செலவில் தமக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆசிரியர்கள் தமது பெற்றோர்கள் போன்று அவர்களது உடல் நிலைகளை நாங்கள் கவணித்து வருகின்றோம்.

எங்களை கல்வித்துறையில் இந்நிலைக்கு இப் பாடசாலைக்குள் ஒவ்வொரு நாளும் 8 மணித்தியாலயங்கள் 1 ஆம் ஆண்டில் இருந்து 12 ஆம் ஆண்டு வரை பாதுகாத்த எங்களது இரண்டாம் நிலைப் பெற்றோர்கள் எங்களது ஆசிரியர்கள்.

அவர்கள் ஓய்வு நிலையின் போது அவர்களது உடல் சுகாதாரம் நோயிலிருந்து பாதுகாத்து மாதா மாதம் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டம் 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

.இவ்வாறான ஓர் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு எங்கள் கல்லூரியின் ஸ்தாபக அதிபர் ஆர். ரீ, அலஸ் பழைய மாணவர்கள் பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வருகை தந்த போது அவர்கள் இவ்வாறு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுகாதாரத்திற்காக ஓர் திட்டத்தை ஏற்பாடு செய்யும்படி கூறியிருந்தார்.

இக்கல்லூரியில் இருந்து வைத்தியத்துறையில் கற்ற மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடைமுறைப்படுத்தும் வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்கள் நிதி வசதிகளை முன் வந்தன் விளைவாக இத் திட்டம் ஆரம்பிக்கபட்டு தற்பொழும 2026 ஆம் ஆண்டில் 20 வருடங்கள் வெற்றிகரமாக நடைமுறபை்படுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இத் இத்திட்டம்q இலங்கையில் உள்ள பாடசாலைளுள் இப் பாடசாலையே மட்டுமே முதன் முறையாக இந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுகாதார திட்டமொன்றை பழைய மாணவர்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் நிமித்தம் இந் நினைவு முத்திரையும் வெளியீட்டு வைத்தமையும் முதல் சந்தர்ப்பமாகும் என இவ் திட்டத்தின் 88 குழுவின் டாக்டர் துசார குணதிலக்க ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமதிடம் கூறினார்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *