விளையாட்டு

DPL-2026 Season 5 சம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட தெல்தோட்டை பிரிமியர் லீக் Season 5 மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியனாக முர்ஷிட் தலைமையிலான தெல்தோட்டை டிராகன்ஸ் அணி இரண்டாவது முறையாக முடி சூடிக் கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் தெல்தோட்டை கரகஸ்கட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பயாஸ் தலைமையிலான தெல்தோட்டை ரோயல்ஸ் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தெல்தோட்டை டிராகன்ஸ் அணி வெற்றிக் கொண்டது.

போட்டித் தொடரின் நாயகனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணியின் தலைவர் முர்ஷிட் தெரிவாக இறுதிப் போட்டியின் நாயகனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அஷான் தெரிவானார்.

தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக தெல்தோட்டை டிராகன்ஸ் அணியின் அஷான் மற்றும் சிறந்த Legand பந்து வீச்சாளாராக தெல்தோட்டை டிராகன்ஸ் ஹலீம் தெரிவாக,
சிறந்த துடுப்பாட்ட வீரராக தெல்தோட்டை டிராகன்ஸ் அணியின் தலைவர் முர்ஷிட் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *