உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க “வளர்பிறை” சஞ்சிகை வெளியீட்டு விழா

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களை உலகிற்கு பறைசாற்றும் ‘வளர்பிறை’ ஆண்டுச் சஞ்சிகையின் அங்குாரார்ப்பண வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி வியாழக்கிழமை பி.ப. 1.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

​கல்லூரியின் முதல்வர் திரு. ஏ.ஜி.ஏ. ஹபீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்லூரி மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது. பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரியை ஆர்.எப். ருமைஸா இதன் முதலாவது இதழாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தெல்தோட்டை, மனால் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஏ.எல்.எம். நதீர் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *