“நான் நேசிக்காத ஜே.ஆர்” நூல் வெளியீடு..!
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய ஜே.ஆர். ஜயவர்தன நினைவுப் பேருரையிலிருந்து தொகுக்கப்பட்ட “நான் நேசிக்காத ஜே.ஆர்” என்ற நூலும் அதன் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலான பதிப்பு நூல்களும் எதிர்வரும் 2026 மார்ச் 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன கேந்திர நிலையத்தில் (191, தர்மபால மாவத்தை, கொழும்பு 07) வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
வெளியீட்டு வைபவத்தில், சிங்கள மொழியிலான நூல் தொடர்பான விமர்சனத்தை சர்வதேச ஊடக ஒத்துழைப்புக்கான ஆசிய பிராந்திய ஆலோசகரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி ரங்க கலன்சூரிய அவர்களும், தமிழ் நூல் தொடர்பான விமர்சனத்தை ஐக்கிய இராச்சிய இஸ்லாமிய அறக்கடளையின் தலைவரும், குழந்தைகள் நல விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் முஸ்தபா ரயீஸ் அவர்களும், ஆங்கில நூல் குறித்தான விமர்சனத்தை வெலிகம மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான ரெஹான் ஜயவிக்ரம அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
