விளையாட்டு

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு..!

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெதகெகில பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியனாக பெரோனி தலைமையிலான வெஸ்ட்டர்ன் வொரியர்ஸ் அணி முடி சூடிக் கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் அஜ்மீர் தலைமையிலான புலட் பிரதர்ஸ் அணியை 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி வெற்றிக் கொண்டது.

போட்டித் தொடரின் நாயகனாக புலட் பிரதர்ஸ் அணியின் மனாசிர் தெரிவாக இறுதிப் போட்டியின் நாயகனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் ரஸீன் தெரிவானார்.

தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக புலட் பிரதர்ஸ் அணியின் தலைவர் அஜ்மீர் தெரிவாக, சிறந்த துடுப்பாட்ட வீரராக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் ரஸீன் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *