சீனன்கோட்டை வரலாற்றில் முதல் தடவையாக பள்ளிவாசலில் கடமையாற்றிய முஅஸ்ஸின் கௌரவிப்பு..!
பேருவளை சீனன் கோட்டை நவ்பர் ஜாபிர் மாவத்தை இப்ராஹிமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக முஅஸ்ஸினாக கடமையாற்றும் முகத்தமுஷ் ஷாதுலி அபுல் ஹஸன் ஹாஜியாரின்; சேவைகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வும்இ புனித ரமழான் மாதம் இரவு நேரத்தில் 30 நாட்கள் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கு பணப் பரிசில் வழங்கும் வைபவமும் மேற்படி ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி ஸாவியா பரிபாலன கமிட்டியுடன் பிரதேச வாழ் மக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததோடு அபுல் ஹஸன் ஹாஜியாருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க இணைப் பொருளாளர்களான அல்ஹாஜ் ஸபுவான் நயீம்இ ஏ.இஸட்.எம் ஸவாஹிர் ஹாஜியார்இ பள்ளிச் சங்க உறுப்பினர் இஸ்ஸத் ஸவாஹிர்இ சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் கலீபதுஸஷ் ஷாதுலி மௌலவி அல்ஹாஜ் ரபீக் (பஹ்ஜி)இ சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸ் பரிபாலர் மௌலவி எம்.டப்ளியூ.எம் பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி)இ மேற்படி ஸாவியாவின் இமாம்களான மௌலவி முஹம்மத் அன்வர் (அஜ்வாதி)இ மௌலவி முஹம்மத் அமீன் (அல்பாஸி)இ ரயீஸ{ல் முகத்தமுஷ் ஷாதுலி அல்ஹாஜ் ஹம்ஸா உட்பட பெருமளவிலான இஹ்வான்கள் கலந்து கொண்டனர்.
சீனன் கோட்டையின் வரலாற்றில் பள்ளிவாசல் ஒன்றில் தொடர்ந்து சேவையாற்றிய முஅஸ்ஸின் ஒருவரை கௌரவிப்பது இதுவே முதல் தடவையாகும்.
அபுல் ஹஸன் ஹாஜியாரின தியாகம் மிகு பணிகளை கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) அவர்கள் பாராட்டிப் பேசினார். ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் கலந்து கொண்டு சிறார்களுக்கு பியூட்டி ஜெம்ஸ் அனுசரனையுடன் கைக் கடிகாரமும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
முப்பது வருட காலம் பணியாற்றிய தன்னை பாராட்டி கௌரவித்தமை குறித்து அபுல் ஹஸன் ஹாஜியார் நன்றி தெரிவித்தார்.
(பேருவளை : பீ. எம் முக்தார்)






