உள்நாடு

சீனன்கோட்டை மபாஹிரிய்யா ஸாவியாவில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றியோருக்கு பணப் பரிசில்கள்…!

பேருவளை சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தை தாஜுல் மபாஹிரிய்யா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் இரவு நேரத்தில் 30 நாட்கள் நடைபெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களுக்கு பணப் பரிசில் வழங்கும் வைபவம் மேற்படி ஸாவியாவில் சிறப்பாக நடைபெற்றது.

சீனன் கோட்டைப் பள்ளிச்சங்கத் தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீட உப தலைவருமான ஏ.எச்.எம். முக்தார் ஹாபஜியார், மேற்படி ஸாவியாவின் உபகுழு அங்கத்தவர்களான ருமைஸ் ஹாஜியார், அல்ஹாஜ் துல்பிகார் ஸியாத், அல்ஹாஜ் ஏ.எச்.எம் முர்ஸி, அல்ஹாஸ் ஸஹ்ரான் பாயிஸ், அல்ஹாஜ் பாலிக் மர்ஸ{க் ஆகியோரின் வழிகாட்லின் கீழ் ஸாவியா இமாம்களான மௌலவி எஸ்.ஐ.எம். அஸ்லம் (முஅய்யதி), மெலவி எம்.டப்ளியூ.எம் ரிஸ்வி கரீம் (இன்ஆமி) ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இந்த ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் இம் மஜ்லிஸில் பங்குபற்றினர். முதல் கட்ட பரிசளிப்பு நிகழ்வு சீனன் கோட்டைப் பள்ளிச்சங்கத் தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாபஜியாரின் இல்லத்திலும், இரண்டாம் கட்ட பரிசளிப்பு மேற்படி ஸாவியாவிலும் இடம்பெற்றது. ஸாவியாவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்சீனன் கோட்டைப் பள்ளிச்சங்க இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஸவாஹிர் ஸரூக், உப குழு உருப்பினர் அல்ஹாஜ் ஸஹ்ரான் பாயிஸ், மற்றும் எம்.கே.எம். இல்திபத் ஆகியோர் கலந்து கொண்டனர். 65 மாணவர்களுக்கும் பியூட்டி ஜெம்ஸ் அனுசரனையுடன் கைக்கடிகாரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ஸாவியாவில் நடைபெற்ற வழீபா யாகூத்தியா மஜ்லிஸில் தொடர்ந்து பங்குபற்றிய சிறார்களுக்கும் பரிசி வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

(பேருவளை : பீ. எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *