உள்நாடு

கொழும்பு – அஹதிய்யாப் பாடசாலையின் 41ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா

கொழும்பு – அஹதிய்யாப் பாடசாலையின் 41ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா, கொழும்பு – பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஹாஜரா மண்டபத்தில், அண்மையில் சிறப்புற நடைபெற்றது.
இவ்விழாவின்போது, மாணவிகளின் கல்விசார் சிறப்புகளும் நற்பண்புகளும் கௌரவிக்கப்பட்டன.
நிகழ்வில், கொழும்பு அஹதிய்யாப் பாடசாலை – மகளிர் பிரிவின் தலைவர் மற்றும் அஹதிய்யாப் பாடசாலைகளின் நிறுவுனர் மர்ஹூம் எம்.எச்.ஏ. அசீஸ் அவர்களின் புதல்வி திருமதி மின்ஹா அஹமத், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
“சிறந்த மாணவர்களுக்கான விருது” என்பது, கொழும்பு அஹதிய்யாப் பாடசாலையின் அதி சிறப்பு மிகு மாணவர்களுக்கு வழங்கப்படும் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாகும்.
இந்த விருது, இலங்கையில் அஹதிய்யாப் பாடசாலைகளை நிறுவிய மர்ஹூம் எம்.எச்.ஏ. அசீஸ் மற்றும் அவரது துனைவியார் மர்ஹூமா ஜிஃப்ரியா அசீஸ் ஆகியோரின் நினைவாக வழங்கப்படுகிறது.
இவ்விருதினை, அவர்களின் குடும்பத்தினர் இன்றும் தாராளமாக வழங்கி வருகின்றனர்.
இவ்வருடம், இச்சிறப்பு விருதுகளைப் பெற்ற மாணவிகளான
மரியம் ஃபர்ஹான் – தரம் 3 (தமிழ் – கனிஷ்டப் பிரிவு)
ஆயிஷா அம்னா ஹஸன் – தரம் 11 (சிங்களம் – சிரேஷ்டப் பிரிவு) ஆகியோரது சாதனைகள், கொழும்பு – அஹதிய்யாப் பாடசாலையின் கல்விசார் திறமைகளையும் உயரிய மதிப்பீடுகளையும் பிரதிபலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *