அரசு ஊழியரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று அரச ஊழியர்கள் உள்ளிட்ட முழு நாட்டையும் ஆபத்தான நிலையில் சிக்கவைத்துள்ளது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் உரிய கடமைகளை நிறைவேற்றித் தருவோம். நிறுவனங்களில் பணிப்பாளர் சபைகளை தாபித்து தொழிலாளர்களை அந்த பணிப்பாளர் சபைப் பிரதிநிதிகளாக நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்மாதிரியான தொழிற்சங்கமாக தொழிலாளர்களின் துன்பம், கண்ணீர், வலியை பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே முன்வைத்து வருகின்றது. மாற்று அரசியல் இயக்கங்களின் தொழிற்சங்க தலைவர்கள் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை ஐக்கிய மக்கள் சக்தியிடமே முன்வைக்கின்றனர். அது மரியாதைக்குரிய விடயமாக அமைந்து காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இலாபம் ஈட்டும் நிறுவனங்களை சூறையாடி விற்கும்போது அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியே எதிர்ப்பை தெரிவித்தது. ஏயர் லங்கா கேட்டரிங், லிட்ரோ கேஸ், டெலிகாம், காப்புறுதிக் கூட்டுத்தாபணம் போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் சோஷலிஸ தொழிற்சங்கத் தலைவர்களை விடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களிடமே அடைக்கலம் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் உரிமையை வார்த்தையால் மட்டுமல்ல செயலாலும் ஐக்கிய மக்கள் சக்தியே பாதுகாத்து வருகின்றது. ஏனைய கட்சிகள் உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்தது ஆட்சி கிடைக்கும் வரை மட்டுமே என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய ஊழியர் சங்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா நேற்று (23) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மின்சார சபையின் 23,000 ஊழியர்களை வீதியில் இறக்கி, ஜனாதிபதி பதவியும் நகர சபை தலைவர் பதவியும் பெற்று ஆட்சிக் கதிரைகளில் உட்கார்ந்த பின்னர் இந்த 23,000 ஊழியர்களை கைவிட்டுள்ளனர். மின்சார சபையின் ஊழியர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்து வருகின்றது. அரச நிறுவனங்களின் நிலைப்பாட்டிற்காகவும் ஊழியர் உரிமை பாதுகாப்பிற்காகவும் எப்போதும் ஐக்கிய மக்கள் சக்தியே முன்நிற்கின்றது. தொடர்ந்தும் முன்நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணத்தை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணத்தை மூடுவதற்கு முயன்றபோது பாராளுமன்றத்தின் அமைச்சு சார் ஆலோசனை குழுக் கூட்டங்களுக்குச் சென்று பேசியதால் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணம் பாதுகாக்கப்பட்டது. வேறு எந்த எதிர்க்கட்சி தலைவரும் இவ்வாறு செய்யவில்லை. அரச நிறுவனங்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் ஆட்சியாளர்கள் இப்போது ஆட்சியைப் பெற்று உழைக்கும் மக்களை புறக்கணித்து நடந்த வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 தற்போதைய அரசுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்த அரச ஊழியரை இன்று இந்த அரசாங்கம மறந்து விட்டு செயற்பட்டு வருகின்றது.
14 இலட்சம் அரச ஊழியர்களை மறந்து இந்த அரச நடந்துகொள்கின்றது. இந்த அரச நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக முக்கியமான மறுசீரமைப்புகளை செய்யப்பட வேண்டும். என்றாலும் ஊழியர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதனைப் பாதுகாத்தவாறே மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 ஈரான் யுத்தம் குறித்து எதிர்க்கட்சி எச்சரித்தை விடுத்த சமயங்களில் அரசாங்கம் எமக்கு சேறு பூசின.
இன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பியவர்கள் போல செயற்பட்டு வருகின்றனர். 2025 ஜூன் மாதத்திலிருந்தே ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. உண்மையான செயல்திறனுள்ள அரசாங்கமெனில் அந்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்பில் கவனம் செலுத்தி இதற்கு முகம் கொடுக்க தயாராக இருந்திருக்க வேண்டும். இந்த விடயங்களை எதிர்க்கட்சி முன்கூட்டியே கணித்திருந்தது. உரிய வகையில் அரச நிர்வாகத்தை இயக்க வேண்டும். என்றாலும் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சேறு பூசும், எதிர்க்கட்சியின் முக்கியமான யோசனைகளை கேலிக்கு உள்ளாக்கிவதையுமே செய்து வந்தது. இந்த எரிசக்தி பாதுகாப்பு விடயத்தில் கூடிய கரிசனை எடுத்திருக்க வேண்டும். என்றாலும் அரசாங்கம் அதை செய்யவே இல்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 அரசாங்கத்தில் கலாநிதிகள், பேராசிரியர்கள் இருந்தாலும் சர்வதேச அரசியல் குறித்து எந்த புரிதலும் அவர்கள் மத்தியில் இல்லை.
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதிக்கும், ஆளும் தரப்பில் இருக்கும் கலாநிதிகள், பேராசிரியர்களுக்கும் சர்வதேச அரசியல் குறித்து எந்த புரிதலும் அவர்கள் மத்தியில் இல்லை. உலக நடப்பு தொடர்பிலான புரிதல் இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விடயமாகும். இந்த பிரச்சினை ஏற்பட்ட பிறகு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனைகளை ஜனாதிபதி பொருட்படுத்தாமல் இருந்தார். ரஷ்யவிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கு வழங்கப்பட்டமை குறித்துக் கூட இந்த அரசு அறியாமல் இருந்த சமயம் அதை சுட்டிக்காட்டிய பின்னர் சேறு பூசும் பேச்சுகளை பேசினர். இந்த விடயத்தில் அரசாங்கம் தாமதமாகவே நடந்து கொண்டது. தாமதமாகவே ரஷ்ய தூதுவரைச் சந்தித்தாலும் எண்ணெய் ஒப்பந்தங்களை எட்டிக்கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இந்த அரசின் முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் கொள்கையாக பழிவாங்கலே காணப்படுகின்றது.
அரசியல் பழிவாங்கல், ஊழல், மோசடி, ஏமாற்றல், பொய் ஆகியவற்றால் அரசு நிர்வாகம் செய்யலாம் என்று இந்த அரசாங்கம் நம்புகிறது. அது சாத்தியப்படாது. உலகில் மிக அதிகமான எண்ணெய் விலை கொண்ட நாடாக நமது நாடு மாறி ஒவ்வொரு துறையும் கடுமையான நிலையில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கல்வி மற்றும் சுகாதார துறைகள் கூட சரிவைச் சந்தித்துள்ளன. அரசின் முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் இருந்ததே இதற்கு காரணமாகும். இந்த அரசாங்கம் வரையறையின்றி எண்ணெய் விலையை அதிகரித்து பொருளாதாரத்தை சுருக்கி வருவாய் வழிகளை அழித்து சமூகத்தில் வறுமையை அதிகரித்து விட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩வறுமை பற்றி கூட இந்த அரசுக்கு சரியான தரவுகள் இல்லை.
நாட்டில் மூன்றில் ஒரு வீதமானோர் ஏழ்மையில் இருக்கின்றனர். இதை தொடர்பில் கேள்வி கேட்கும்போது பதில் சொல்ல கால அவகாசம் கேட்கின்றனர். திறமையற்ற இந்த அரசால் மக்கள் நிலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்கே எண்ணெய் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தாலும், இப்போது நான்கு வகையான வரிகளை எண்ணெய்கள் மீது விதித்திருக்கின்றனர். இப்போதாவது எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதுள்ள வரிகளை குறைக்க வேண்டும். இந்த எரிசக்தி வரி நேரடியாக எல்லா துறைகளையும் பாதிக்கிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
🟩 அரசுக்கு தூரநோக்கு இல்லை.
மத்திய கிழக்கு யுத்தத்திற்கு அரசு பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும், இந்த விடயம் தொடர்பில் தூரநோக்கோடு செயல்படாமல் இருந்தமை அரசின் தவறாகும். மாற்று நடவடிக்கைகள் எடுக்காமல் அரசியல் பழிவாங்கல்களை செய்து வந்தால் நாடு சிக்கலில் மாட்டியது. இந்த அரசின் முதலும், இரண்டாவதும், மூன்றாவதும் கொள்கையாக பழிவாங்கலே காணப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 நிலக்கரி மோசடியை மத்திய கிழக்கு யுத்தத்தால் மூடி மறைக்க இந்த அரசு முயற்சிக்கிறது.
இந்த அரசின் தலைமையில் நடைபெறும் நிலக்கரி மோசடியை மத்திய கிழக்கு யுத்தத்தை காரணமாக கொண்டு மறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். இப்போது நுரச்சோலை நிலையம் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் உற்பத்தித் திறனை இழந்து, மின்சாரத்தை எரிசக்தி நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்வதால் மின் கட்டண அதிகரிப்பு ஏற்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு வழங்க வேண்டிய எரிசக்தியை நிலையங்களுக்கு வழங்க நேரிட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் இயந்திரங்கள் சேதமடைந்து, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மின்சார வெட்டும் ஏற்படுகின்றன. இதனால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றன எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 மக்கள் அரசின் செயற்பாடுகள் குறித்து இதை விட கூடிய விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்த விடயங்கள் தொடர்பில் குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்ல தெளிவோடு இவற்றை பார்க்க வேண்டும். சர்வதேச சட்டங்களை பற்றி கூட ஜனாதிபதி அறியாமல் இருந்தார். இந்த விடயங்கள் தொடர்பில் மக்கள் அறியாமல் இருந்தால் மக்கள் மேலும் மேலும் ஏமாற்றப்படுவர். இது தான் நடக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 நாங்கள் நடுத்தரப் பாதையையே பின்பற்றுகிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தி மனிதாபிமான முதலாளித்துவத்தையே பின்பற்றுகின்றது. நீதி, நியாயம், சமூக ஜனநாயகத்தை நிலைநாட்டும் நடுத்தரப் பாதையையே பின்பற்றுகிறோம். இந்த மூன்றாவது பாதையையே ஐக்கிய மக்கள் சக்தி பின்பற்றுகின்றது. வலதுசாரியும் இல்லாமல், இடதுசாரியும் இல்லாமல் நடுத்தர மத்திய பாதையிலையே நாம் செயற்பட்டு வருகிறோம். ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் அழகிய ஏமாற்று வார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றாது. மக்களை விழிப்படைய செய்யும் திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்நின்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.













