Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

உலகில் அமைதி சமாதானம் ஏற்பட இருகரமேந்துவோம்; பேருவளை நகர சபை எதிர்க்கட்சித்தலைவர்

தொடர்ச்சியாக ஒரு மாத காலம் பகல் பொழுதில் பசி, தாகத்துடன் புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்று, இரவில் நீண்ட நேரம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, இறையச்சத்துடன் ஆத்மீகத்தின் உயர் நிலையை அடைந்த திருப்தியுடன் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் எமது சமூகத்தினர்களுக்கு வாழ்த்துக்களைக் தெரிவித்துக்கொள்கிறேன். ” என்று பேருவளையின் நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஸாம் பளீல், தனது பெருநாள் வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லீம்கள் இந்த வருடம் புனித நோன்பு நோற்ற வேளையிலேயே அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சேர்க்கையால் ஈரானில் யுத்தம் திணிக்கப்பட்டு உலகமே ஆடிப் போய் இருக்கிறது. இந்த நெருக்கடி நிலையில் பொறுமை காத்து இறையச்சத்தோடு நோன்பு நோற்று பூர்த்தி செய்திருப்பது முஸ்லிம்களின் ஆத்மீக உயர் பண்பை பறைசாற்றுவதாகவுள்ளது.

அல்லாஹ் அல்குர்ஆனிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வாக்கிலும் வாக்களித்த பிரதிபலன்கள் கிடைக்கவும் உலகில் அமைதியும் சமாதானமும் நிலவவும் இந்த புனித ஈகைத் திருநாளில் அல்லாஹ்விடமே இருகரமேந்தி துஆச் செய்கிறேன்.

(பீ.எம். முக்தார் – பேருவளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *