உள்நாடு

கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் அம்பாரை மாவட்ட சமாதான நீதவான் சங்கமும் இணைந்து நாடத்திய இன நல்லினக்க இப்தார் நிகழ்வு அட்டாளைச்சேனை நெல்லுக்குத்தி ரெஸ்டுடனில் நடைபெற்றது.(18)

உதவி மாவட்ட சாரண ஆணையாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப். றிபாஸ்(ஜேபி)யின் நெறிப்படுத்தலின் கீழ் சமாதான நீதவான் சங்கத்தின் தலைவர் யூ. எல்.எம். ஹாசிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர் பௌஸ், மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெவ்வை, ஓய்வு நிலை அதிகாரிகளான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.வாஹிட், கோட்டக்கல்விப்பணிப்பாளர் வீ.குணாலன்,பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.அப்துல் மஜித்,உட்பட கல்வியலாளர்கள், சாரணர் சங்கத்தின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமாதான நீதவான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த பத்து வருடங்களாக ரமழான் மாதங்களை முன்னிட்டு சகல இன மக்களையும் ஒன்றினைத்து இனநல்லினக்கம், பரஸ்பரம், பரிந்துணர்வு, ஒற்றுமை போன்ற விடயங்களை உள்ளடக்கி இவ்வாரான இப்தார் நிகழ்வுகளை இவ்விரு அமைப்புக்களும் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *