உள்நாடு

நேத்ரா தொலைக்காட்சியில் ரஷீத் எம். றியாழின் பெருநாள் கவிதைப் பொழிவு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலை வரிசையில் நோன்புப் பெருநாள் தினத்தன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை இடம்பெறவுள்ள விசேட பெருநாள் நிகழ்ச்சியில் கவிஞர் ரஷீத் எம் றியாழின் “வான் கிழித்து வந்த பிறை” எனும் தலைப்பிலான விசேட கவிதைப் பொழிவு இடம்பெறவுள்ளது.

வானொலி தொலைக்காட்சிக் கலைஞர் முபாரக் மொஹிதீன் இந்நிகழ்ச்சியை தயாரித்தளித்துள்ளார்.

பத்திரிகையாளரும் கவிஞருமான ரஷீத் எம். றியாழ் தினகரன் வாரமஞ்சரியின் முன்னாள் “கவிதை பூங்கா” எனும் கவிதைப் பகுதியின் சுமார் 11 ஆண்டுகளாக பொறுப்பாசிரியராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையில் “வசந்த வாசல்” எனும் கவிதா நிகழ்ச்சியை சுமார் ஐந்து ஆண்டுகள் தயாரித்தளித்தவருமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *