உள்நாடு

சாய்ந்தமருதில் நபி வழிபெருநாள் திடல் தொழுகை

சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திடல் தொழுகை வழமைபோன்று இம்முறையும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பெருநாள் தினத்தன்று சரியாக காலை 06.30 மணிக்கு சாய்ந்தமருது பொலிவேரியன் (கரைவாகுப்பற்று) கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் என பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எம்.எம். பஷீர் (மக்கி) மௌலவியால் குத்பா பிரசங்கமும் நிகழ்த்தவிருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் திடல்தொழுகைக்கு வரும்போது அனைவரும் தங்களது வீட்டில் வுழு செய்துகொண்டு முஸல்லாவுடன் வருமாறும் பெண்களுக்கு தனி இடவசதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த நேரமான காலை 6.30க்கு தொழுகை ஆரம்பிக்கப்படும் எனவும் யாருக்காகவும் தொழுகைநேரம் தாமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை 077 375 42 26 அல்லது 076 999 0297 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *