ஷவ்வால் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1447 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழு தலைவர். மெளலவி எம்.பி.எம். ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இருக்கும் பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள். பிறைக் குழு உறுப்பினர்கள் .அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டல திணைக்கள அதிகாரி மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
